ஸ்பீடு வட்டி- வியாபாரிகள் அவதி
ஏழை. எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நிதி உதவி திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என ஏழை, எளிய மக்கள் அவசர தேவைக்காக வாங்கும் சிறய தொகைக்கு பல மடங்கு வட்டி போட்டு பணம் பறிக்கப்படுகிறது. இதனால் சம்பாதிக்கும் சிறிய தொகை கூட வட்டிக்கு செல்லும் நிலை உள்ளது.