அதிகரிக்கும் மது விற்பனை
மது குடித்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலை மாறி, மது குடித்தால் தான் கெத்து என தற்போதைய பேஷனாகி விட்டது. இதனால் ஆண்கள் முதல் பெண்கள் வரை நாள்தோறும் மதுக்குடிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது. அந்த வகையில் இரவ நேர பார்ட்டி தொடங்கி பல்வேறு கேளிக்கை நிகழ்வில் மதுவிற்கு என தனி இடம் அமைப்பது தற்போது அதிகரித்து விட்டது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை மது விற்பனை தான் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய நிதி ஆதாராமாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் வருடத்திற்கு 45ஆயிரம் கோடி ரூபாயும், நாளொன்றுக்கு 120 கோடியும் மது விற்பனை செய்யப்படுகிறது.
tasmac
ஒரே நாளில் 150 கோடிக்கு விற்பனை
இதுவே தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்கள் என்றால் மது விற்பனை புரட்டி போட்டு விடும். அந்த வகையில் மதுவிற்பனையானது அதிகரித்து வரும் நிலையில் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட குவாட்டர் பாட்டில் முதல் புல் பாட்டில் மற்றும் பீர்களுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகமாக கட்டணமானது கள்ளத்தனமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் வெறு வழியின்றி கூடுதல் பணத்தை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கி செல்லும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
tasmac
பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்
ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என கணக்கிட்டால் ஒரு நாளுக்கு மட்டும் பல லட்சம் ரூபாய் களத்தனமாக குடிமகன்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. இந்த பணம் யாருக்கு செல்கிறது என்பது பெரும் மர்மமாகவே உள்ளது. இந்தநிலையில் தான் மதுக்கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டாஸ்மாக் நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாஸ் டிஜிட்டல் முறை
அந்த வகையில் மதுபாட்டில்களில் கியூ ஆர் கோட் பதிப்பது, ஸ்கேனர் இயந்திரம் வழங்குது என டிஜிட்டம் மயமாக்க ரெயில் டெல் நிறுவனத்திற்கு 294 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே ஆர்டர் வழங்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் சோதனை அடிப்படையில் மதுபான கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக தற்போது சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் மதுபானங்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது
கியூ ஆர் கோடு ஸ்கேன்- டாஸ்மாக்
இதனையடுத்து நேற்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் பழைய மதுபான பாட்டில்கள் அதிகளவு இருப்பதால் அதனை விற்பனை செய்து விட்டு இன்று முதல் (15.11.2024) கியூ ஆர் கோடு மூலம் பதிவு செய்து பில் வழங்கும் முறையை இன்று முதல் செயல்படுத்த டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று முதல் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் உள்ள 220 கடைகள் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் பில் வழங்கும் நடைமுறை தொடங்கப்படவுள்ளது. இந்த புதிய நடைமுறை காரணமாக சரக்கு இருப்பு மற்றும் விற்பனை செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் அதிகாரிகளால் பெற முடியும்.
இனி டாஸ்மாக்கில் பில்
இந்த டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை காரணமாக Cash Payment. UPI Payment, Card Payment மூலம் இனி பணத்தை செலுத்த முடியும், அந்த வகையில் பில்லில் உரிய பணத்தை மட்டும் வழங்கினால் போதும். இதன் காரணமாக கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் முறைக்கு முடிவு ஏற்படும் என நம்பப்படுகிறது.
மேலும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய முடியும். கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதும் தடுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.