கொடைக்கானலுக்கு டூர்.! வெளியான 2 முக்கிய கட்டுப்பாடுகள்- என்ன தெரியுமா.? மீறினால் அபராதம்

First Published | Nov 15, 2024, 8:06 AM IST

கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டு, மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

HILLS

மலைப்பகுதி சுற்றுலா

கடிகாரத்தில் உள்ள முட்களின் வேகத்தை விட மனிதர்கள் நிற்காமல் தினந்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் நிலை தான் தற்போது உள்ளது. அந்த வகையில் விடுமுறை கிடைக்காதா.? வெளியூர் சுற்றுலா செல்ல முடியாதா என தவிக்கும் நபர்கள் ஏராளம். 2 அல்லது 3 நாட்கள் விடுமுறை என்றால் உடனடியாக குடும்பம் அல்லது நண்பர்களோடு வெளியூருக்கு பறந்து விடுவார்கள். அப்படி வெளியூருக்கு பயணம் செய்ய தமிழக மக்கள் பெரிதும் விரும்பும் இடம் மலைப்பகுதியாகும்,

kodaikanal ooty entry

இ-பாஸ் கட்டாயம்

அந்த வகையில் கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் என புறப்படுவார்கள். இந்த நிலையில் மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கணக்கிடும் வகையிலும், கட்டுப்படுத்தும் வகையில் இ பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் மலைப்பகுதிகளுக்கு செல்வதால் சுற்று சூழல் மாசுபடுவதோடு வாகன நெரிசல் மற்றும் இயற்கையும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tap to resize

E PASS

இ பாஸ் எடுப்பது எப்படி.?

இதனை கருத்தில் கொண்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்பவர்கள் கட்டாயம் இ பாஸ் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 5 மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதும் இந்த நடைமுறை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி கொடைக்கானல் செல்பவர்கள் கட்டாயம் இ பாஸ் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PLASTIC

 பிளாஸ்டிக் தடை

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம், கொடைக்கானலில் நுழைய அனைத்து வாகனங்களும் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் பின்வரும் முறைகள் மூலம் எளிதாக இ-பாஸுக்கு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இ பாஸ் பெறுவதற்கான இணையதளம் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. https://epass.tnega.org/ என்ற இணையதள முகவரியில் தங்களது பயண விவரங்களை பதிவு செய்து கொடைக்கானலுக்கு பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 

kodaikanal

அபராதம் விதிப்பு

இதே போல மற்றொரு அறிவிப்பு தான் பசுமை வரி அபராதம், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பிளாஸ்டிக் தடையை மீறுவது கண்டறியப்பட்டால் பசுமை வரி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறினால் ஒரு பாட்டிலுக்கு ரூ. 20 அபராதம் விதிக்கப்படுவதோடு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!