ஒரு நாள் முருகன் கோயில் ஆன்மிக சுற்றுலா.! இவ்வளவுதான் கட்டணமா.? வெளியான அசத்தல் அறிவிப்பு

First Published | Nov 15, 2024, 7:25 AM IST

தமிழக சுற்றுலாத்துறை பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாத அம்மன் கோயில் சுற்றுலா, நவகிரக கோயில் சுற்றுலா, அறுபடை வீடு சுற்றுலா போன்றவை இதில் அடங்கும். புதிதாக ஒரு நாள் முருகன் கோயில் சுற்றுலாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TTDC

79ஆயிரம் கோயில்களை கொண்ட தமிழகம்

இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளது. அந்த வகையில் அதிக கோயில்களைகொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு மட்டும்79ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தை ஆன்மிக பூமி என இறைபக்தர்கள் கூறுவார்கள். இந்த கோயில்களை பார்ப்பதற்காகவே வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தமிழகத்திற்கு வருவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர்கள் ஆன்மிக சுற்றுலாவானது செல்கின்றனர்.  இந்தநிலையில் தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பாக பல்வேறு சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.  

TEMPLE TOUR

தமிழக அரசின் கோயில் சுற்றுலா

குறிப்பாக தமிழ்நாடு சுற்றுலா, மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, ஒரு நாள் சுற்றுலா, 10 நாள் சுற்றுலா என பல சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
அந்த வகையில் ஆன்மிகத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுற்றுலா மிகவும் பிரபலமானது.  ஆடி மாத அம்மன் கோயில் சிறப்பு சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டத்திற்கு 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது, அடுத்ததாக ஒரு நாள் மேல்மருவத்தூர்,  திருவண்ணாமலை சுற்றுலாவும் அறிமுகம் படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்காக 2500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.  

Latest Videos


TEMPLE

கோயில் சுற்றுலா திட்டங்கள்

108 அம்மன் கோவிகளை சுற்றி பார்க்கும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு 11 ஆயிரத்து 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, நவகிரக கோவில்களை சுற்றி பார்க்கும் வகையில் இரண்டு நாள் சுற்றுலாவானது செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அறுபடை வீடு சுற்றுலாவும், 4 நாட்கள் விநாயகர் படைவீடு சுற்றுலாவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த  திட்டங்களுக்கு ஆன்மீக பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  

murugan temple

கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா

இந்த நிலையில் ஒருநாள் முருகன் கோயில் சுற்றுலாவானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வடக்கு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சுற்றி பார்க்கும் வகையில் ஒரு நாள் முருகன் கோவில் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.  அதே போன்று மற்றொரு திட்டம் தான் சென்னையில் தென் பகுதிகளில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்கும் சுற்றுலாவாகும், 

Murugan Temple

ஒரு நாள் சு்ற்றுலா கட்டணம் என்ன.?

இந்த சுற்றுலாவானது திருவான்மியூர் உள்ள ஆன்மீக மருதீஸ்வரர் கோயில், திருவான்மியூர் உள்ள அறுபடை வீடு முருகன் கோயில், திருப்போரில் உள்ள அருள்மிகு கந்தசாமி கோயில், குன்றத்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், வலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு சுப்ரமணியசாமி கோயில் என கோவில்களில் சுற்றி பார்க்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு 1200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது இந்தத் திட்டத்தின் மூலம் பயணம் செய்ய விரும்பு பக்தர்கள் இணையதளம் மூலமாகவும் நேரடியாக சுற்றுலா துறை அலுவலகத்திற்கு சென்றும் தங்களது பதிவை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!