அப்பாடா.! மழைக்கு ஒரு வாரம் பிரேக்.! முக்கிய அப்டேட் கொடுத்த வெதர்மேன்

First Published | Nov 17, 2024, 7:09 AM IST

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இரவு நேரங்களில் மழை தொடர்கிறது. தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மழை தொடர்பான வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

tamilnadu rain

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மட்டும் மழை தொடர்கிறது. மேலும் தென் மாவட்டங்களிலும் மழையானது கொட்டுகிறது. இந்தநிலையில் வரும் நாட்களில் மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 

rain

டெல்டா மாவட்டங்களில் மழை

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tap to resize

Rain

மிதமான மழை

நாளை (18ம் தேதி )  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 19 ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.. 

சென்னையில் வானிலை

சென்னை மற்றும் புறநகர் பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Rainy Season

சென்னையில் மழைக்கு ரெஸ்ட்

இதனிடையே சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கான இளைவேளை இருக்கும் என கூறியுள்ளார். மேலும் டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் மழை தொடரும் எனவும்,  குறிப்பாக டெல்டா முதல் தென் தமிழகம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Rains

மாத இறுதியில் மழை

(இன்று )ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் - டெல்டா பெல்ட்ஸ் மற்றும் தென் தமிழ்நாடு தொடர்ந்து மழை வரும் என கூறியுள்ளார். முக்கியமாக இன்று கோவை ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனவும் பருவமழை முடியவில்லை, இன்னும் நிறைய நிறைய மழை இருக்கு என தெரிவித்துள்ளார். இந்த மாத கடைசியில் மீண்டும் மழை பெய்யும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!