தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடுமையான வெயிலின் சுட்டெரித்து வந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம் பேசி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
24
வழிகாட்டு நெறிமுறைகள்
ஆனால், எப்போதும் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே மாதம் இறுதியில் தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெயின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் திட்டமிட்டப்படி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடப்பட்டது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
34
சமூக வலைதளங்களில் வைரல்
ஆனால் நேற்று முதல் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாகவும் அதாவது ஜூன் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலானது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரியவந்துள்ளது. ஆகையால் திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.