சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது. பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் 102 டிகிரி, சென்னை, ஈரோடு, கரூர், மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் 100 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்தது.