School Student: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை!

First Published | Sep 14, 2024, 1:26 PM IST

School Student: தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு உகந்ததா இல்லையா என்ற குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

national institute open schooling

தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விரும்பிய நேரத்தில் படித்து, விரும்பிய நேரத்தில் தேர்வினை எழுத முடியும். மேலும், இந்த படிப்பு சிபிஎஸ்இ-க்கு இணையானது என தேசிய திறந்த நிலை பள்ளி அறிவித்து செயல்படுத்தி வந்தது. 

National Open School

இந்நிலையில் தேசிய திறந்தநிலை பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் படித்ததற்கு சமமானது என சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், தேசிய திறந்தநிலை பள்ளி வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசு பணி மற்றும் பதவி உயர்வுக்கு உகந்ததல்ல என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த டிசம்பர் 21-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

Tap to resize

School Student

இந்த அறிவிப்பானது அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவை என்று பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.

school education department

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மறுபரிசீலனை செய்ததில் தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள், தமிழக பள்ளிக் கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானவை என்று ஏற்கப்படுகிறது. ஆகையால் தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவையாகும். உயர்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறைகளின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!