இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்

Published : Jan 13, 2026, 09:51 AM IST

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

PREV
15
கடும் பனிபொழிவு

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை வெளுத்து வாங்கியது. பின்னர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாமல் ஏமாற்றியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலை வந்தாலும் கடும் பனிபொழிவால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சில இடங்களில் மழை பொழிவால் பனிபொழிவு ஓரிரு நாட்கள் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதா என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

அதாவது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

35
இன்றைய சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பிநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது.

45
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது (காலை 10 மணி வரை) 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

55
வெதர்மேன் பிரதீப் ஜான்

தமிழகத்தில் மழை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது டெல்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இன்று மதியத்திலிருந்து டெல்டா பகுதியில் மழையின் அளவு குறைந்து, பின்னர் நின்றுவிடும். தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டின் சில இடங்களில் இன்றுடன் மழை முடிவடையும். அதன் பிறகு மழைக்காலத்தில் ஒரு இடைவெளி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories