தமிழகத்தில் ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை.
தமிழகம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனை அரசே எடுத்து வருகிறது. குறிப்பாக வருமானத்தை கொட்டிக் கொடுக்கும் துறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு பொது விடுமுறை வந்தாலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்படும். தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் கூட இவர்களுக்கு விடுமுறை கிடையாது. அதன்படி ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
24
ஜனவரி 16 திருவள்ளுவர் தினம்
இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லரை விற்பனைக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் கிளப்புகளில் செயல்படும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் (Bars) அனைத்தும் ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) – திருவள்ளுவர் தினம்.
34
ஜனவரி 26 குடியரசு தினம்
மேலும் ஜனவரி 26 (திங்கட்கிழமை) குடியரசு தினம் ஆகிய நாட்களில் முழுவதுமாக மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் எவ்வித மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என எச்சரிக்கை விடுத்துள்ளார். தடையை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க காவல்துறையினரும், ஆயத்தீர்வைத் துறையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காஞ்சிபிரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 வெள்ளிகிழமை அன்று திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியரர் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடபட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை வருவதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.