Pongal Gift 2025
ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
Tamilnadu Government
அதில், 2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரூ.1000 இடம் பெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகை ரூ.1000 கிடைக்குமா? கிடைக்காதா? வெளியான தகவல்!
CM Stalin
அப்படி இருந்த போதிலும் பொங்கலுக்கு இரண்டு வாரங்கள் இருப்பதால் ரூ.1000 தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பொதுமக்களின் தலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இடியை இறக்கியுள்ளார்.
Pongal Gift
இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவிட்டிருக்கிறோம். பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது.
இதையும் படிங்க: மீண்டும் தமிழகத்தில் ஏழரையை கூட்டப்போகுதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்!
Minister Thangam Thennarasu
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.