தமிழ்நாட்டில் அடுத்த முதல்வராக யார் வரணும்? சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதற்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மு.க. ஸ்டாலின் முதலிடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அரசின் செயல்பாடு குறித்து மக்களின் கருத்துக்கள் கலவையாக உள்ளன.

Who Will Be the Next CM of Tamil Nadu? C-Voter Opinion Poll Results sgb
Annmalai, EPS, Stalin, Vijay

அடுத்த தமிழக முதல்வர் யார்?

முதல்வர் பதவிக்கு மு.க. ஸ்டாலின்தான் மிகவும் விரும்பத்தக்க தேர்வாக உள்ளார். சி.வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்தக் கருத்துக்கணிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 18 சதவீத வாக்குகளைப் பெற்று ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 9 சதவீத ஆதரவுடன் நான்வது இடத்தில் இருக்கிறார்.

Who Will Be the Next CM of Tamil Nadu? C-Voter Opinion Poll Results sgb
C-Voter poll results

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

இந்த முடிவுகள் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வலுவான ஆதரவு இருப்பதைக் காட்டுகின்றன. அவருக்கான ஆதரவு மற்ற போட்டியாளர்களை விட கணிசமான அளவுக்கு முன்னிலையில் உள்ளது. ஆனால், விஜய் இரண்டாவது இடத்தில் இருப்பது அவர்மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. இருந்தாலும் அவரது கட்சி இன்னும் முழுமையாக தேர்தலில் அறிமுகமாகவில்லை என்ற கருத்தும் உள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பு தமிழக அரசின் செயல்திறனில் பொதுமக்களின் திருப்தியையும் மதிப்பிட்டுள்ளது. பதிலளித்தவர்களில் 15 சதவீதம் பேர் திமுக அரசாங்கத்தின் செயல்பாடு மிகவும் திருப்தி அளிப்பதாகக் கூறியுள்ளனர். 36 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி எனத் தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை. 24 சதவீதம் பேர் எதுவும் கூறவில்லை.


DMK

திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?

முதலமைச்சராக மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்பாடு குறித்து, பதிலளித்தவர்களில் 22 சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்கிறார்கள். 33 சதவீதம் பேர் ஓரளவுக்குத் திருப்தி என்றும் 22 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 23 சதவீதம் பேர் கருத்து எதுவும் கூறவில்லை.

ஸ்டாலின் மிகவும் விரும்பப்படும் தலைவராக இருந்தாலும், அவரது ஆட்சி பற்றி பொதுமக்ககளின் கருத்து கலவையாக இருப்பதாகவே இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள்:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்திறன் குறித்த பொதுமக்களின் கருத்தும் கேட்கப்பட்டது. பதிலளித்தவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே மிகவும் திருப்தி எனக் கூறியுள்ளனர். 27 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி எனவும் 32 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும் சொல்கின்றனர். 33 சதவீதம் பேர் கருத்துச் சொல்லவில்லை.

பெண்களைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து கேட்டபோது, ​​15 சதவீதம் பேர் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு முக்கியப் பிரச்சினை என 12 சதவீதம் பேரும் போதைப்பொருள் மற்றும் மதுக்கடைகள் பெரிய பிரச்சினையாக உள்ளதாக 10 சதவீதம் பேரும் கருதுகின்றனர். 8 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மையைக் குறிப்பிட்டுள்ளனர்.

MK Stalin family

எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு எப்படி?

சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் குறித்துக் கேட்டபோது, 16 சதவீதம் பேர் மிகவும் திருப்தி, என்றும் 32 சதவீதம் ஓரளவிற்குத் திருப்தி என்றும் 25 சதவீதம் பேர் அதிருப்தி எனவும் கூறியுள்ளனர். 27 சதவீதம் பேர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஸ்டாலின் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக இருந்தாலும், ஆட்சி குறித்த பொதுமக்களின் கவலைகள் அதிகரித்து வருவதும், விஜய் எதிர்பாராத விதமாக தீவிர போட்டியாளராக உயர்ந்திருப்பதும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்பதை உணர்த்துகின்றன.

Latest Videos

vuukle one pixel image
click me!