நீட் தேர்வு
மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில் 12ம் வகுப்பு தேர்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்கள், தற்போது நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும். நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. நீட் தேர்வில் தோல்வி, அச்சத்தால் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை
இந்நிலையில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தர்ஷினி நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அறையில் சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி சீருடை அளவெடுத்த ஆண் டெய்லர்! கட்டாயப்படுத்திய ஆசிரியை! மாணவி பரபரப்பு புகார்! நடந்தது என்ன?
போலீஸ் விசாரணை
தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.