Edappadi Palaniswami : எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்., இந்த சந்திப்பிற்கு தொழிலதிபர் ஒருவர் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டதும், இபிஎஸ் அவரது 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ட்லி காரில் திரும்பியதும் தெரியவந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆளுங்கட்சியான திமுக கூட்டணியானது பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. அந்த கூட்டணியில் பிளவு ஏற்படும் என எதிர்கட்சிகள் காத்திருக்கும் நிலையில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை அனுசரித்து எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் வரை கொண்டு செல்ல திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்,
அதே நேரம் அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு தொந்தரவு கொடுத்து வரும் நிலையில் தற்போது புதிதாக மேற்கு மண்டலத்தில் இருந்து செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
25
அதிமுக கூட்டணியில் குழப்பம்
இதனால் அதிமுக தலைமை திக்குமுக்காடி வருகிறது. இந்த நிலையில் தனது பிரச்சார பயணங்களை ஒத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பறந்தார். குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனை சந்திக்க சென்றவர், அப்படியே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அதிமுகவில் பிரிந்து சென்ற தலைவர்களை இணைப்பது, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை கட்சியில் இணைக்க அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
35
டெல்லிக்கு சென்ற எடப்பாடி
ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இந்த இரண்டு பேரையும் கட்சியில் இணைத்தால் மீண்டும் கட்சிக்குள் குழப்பம் வரும். கட்சிக்குள் தனி அணியாக செயல்படுவார்கள் என தெரிவித்துள்ளார். வேண்டும் என்றால் பாஜகவிற்கு கூடுதல் இடங்கள் தருகிறோம் அதில் அவர்களுக்கு கொடுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை தீவிரப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையானது சுமார் 20 நிமிடங்கள் நீடித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷாவுடன் ஒரு மொழி பெயர்ப்பாளர் மட்டுமே இருந்துள்ளார். அவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா வீட்டிற்கு யுனோவா காரில் சென்றார். அப்போது அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்துள்ளனர். பேச்சுவார்த்தை முடிவடைந்து திரும்பும் போது இபிஎஸ் பென்ட்லி காரில் பின் சீட்டில் அமர்ந்தபடி சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த காரின் மதிப்பு 4 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
55
எடப்பாடி பயணம் செய்த கார் யாருடையது.?
டெல்லி பதிவு எண் கொண்ட அந்த கார் பிரபல கட்டுமான நிறுவனமாக பாஷ்யம் நிறுனவத்தின் அதிபர் தொழிலதிபர் அபினேஷ் கார் என கூறப்படுகிறது. அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது தொழிலதிபர் அபினேஷ் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தான் இருவருக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.