டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக.வில் பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை இணைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணிக்கட்சிகளுடன் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதற்கு நேர் எதிராக உள்ள அதிமுக.வில் தற்போது வரை கூட்டணி சண்டையே ஓய்ந்தபாடில்லை. ஓ.பன்னீர்செல்வம், அவரைத் தொடர்ந்து டிடிவி தினகரன் என முக்கிய நபர்கள் அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
26
மூத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு
இதனிடையே குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக்கூறி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கடந்த 16ம் தேதி இரவு 8.10 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். சந்திப்பின் தொடக்கத்தில் மூத்த நிர்வாகிகளான எஸ்பி வேலுமணி, இன்பதுரை, தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
36
அமித்ஷா உடன் தனிமையில் பேச்சு
சுமார் 20 நிமிடங்கள் மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து அமித்ஷாவை சந்தித்த பழனிசாமி நிர்வாகிகளை வெளியேற்றிவிட்டு சுமார் 40 நிமிடங்கள் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் அமித்ஷாவுடன் தனிமையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொள்ளுமாறு அமித்ஷா கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் பேச்சைக் கேட்டு ஷாக்கான பழனிசாமி ஒரு நிமிடம் உரைந்துபோனாராம். ஆனால் அமித்ஷாவின் கோரிக்கைக்கு பழனிசாமி ஸ்டிரிக்டாக நோ சொல்லி உள்ளார். இதனை கேட்டு அமித்ஷாவின் முகம் சிவந்துள்ளது. அதனை உணர்ந்து கொண்ட பழனிசாமி அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்ள முடியாது. ஆனால் பாஜக.வுக்கு நான் அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துகொண்டு அவர்களுக்கு உங்கள் தரப்பில் இருந்து தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுங்கள்.
56
முதல்வர் வேட்பாளரை மாற்றச்சொன்னவர் டிடிவி
சசிகலா, தினகரன், பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என தினகரன் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் நான் எப்படி அவர்களை கட்சியில் இணைக்க முடியும்? அவர்கள் கூட்டணிக்குள் வந்தாலும் முதல்வர் வேட்பாளராக என்னை தான் ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அதிருப்தி தலைவர்களை சந்திக்கக் கூடாது என்றும் அமித்ஷாவிடம் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டுக் கொண்ட அமித்ஷா இது தொடர்பாக கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன். மேலும் செங்கோட்டையன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று பழனிசாமியிடம் அமித்ஷா கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
66
சந்திப்பில் உடன் இருந்த தொழில் அதிபர்..
அமித்ஷா, பழனிசாமி இடையேயான சந்திப்பின் போது தொழிலதிபர் அபினேஷ் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. சென்னையில் பாஷ்யம் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்திவரும் இவர் தான் அமித்ஷா மற்றும் பழனிசாமி இடையே மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டுள்ளார். அமித்ஷாவை சந்திப்பதற்கு இன்னோவா காரில் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்த பழனிசாமி சந்திப்பை முடித்துக் கொண்டு அபினேஷ்ன் பென்ட்லி காரின் பின் இருக்கையில் அமர்ந்தபடி தனது முகத்தை மூடிக்கொண்டு பயணித்துள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.4 கோடி என்று சொல்லப்படுகிறது. தொழிலதிபர் அபினேஷ் பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மிகவும் பரிட்சயமானவர் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே இவரை மொழிபெயர்ப்பாளராக வைத்து சந்திப்பை முடித்துள்ளார் பழனிசாமி.