Sambo Senthil : யார் இந்த சம்போ செந்தில்.! ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு ஏற்பட்டது எப்படி.?

First Published | Jul 21, 2024, 1:00 PM IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழங்கில் பல பெரிய, பெரிய ரவுடிகளின் பெயர்கள் அடிபட தொடங்கியுள்ளது. அந்த வகையில் 4 கொலைகள் செய்து தலைமறைவாக இருக்கும் சம்போ செந்திலை நோக்கி தற்போது கை நீட்ட தொடங்கியுள்ளது. எனவே சம்போ செந்திலை போலீசார் கைது செய்தால் மட்டுமே இந்த கொலைக்கு முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது. 

Armstrong

ஆம்ஸ்ட்ராங் கொலை

வட சென்னையில் அரசியலில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் பெரம்பூரில் உள்ள அவரது புதிய வீட்டிற்கு முன்பாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே இந்த கொலை தொடர்பாக 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அப்போது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தததாக தெரிவித்தனர். 

Armstrong

ஆம்ஸ்ட்ராங் கொலை- தொடரும் கைது

இதனையடுத்து முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள் உயிருக்கு பயந்து கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என வாக்குமூலம் கொடுக்க தொடங்கினர்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து திமுக, பாஜக, அதிமுக என அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அதன்படி அதிமுகவை சேர்ந்த மலர்கொடி, ஹரிதரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

Tap to resize

யார் இந்த சம்போ செந்தில்

இந்தநிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய மொபைல் போனை அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் ஆற்றில் வீசியதாக தெரிவித்ததையடுத்து போலீசார் அந்த மொபைல் போனை ஸ்கூபா டிரைவிங் போலீசார் கண்டெடுத்துள்ளனர். 

இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் சிலந்தி வலை போல பல பகுதிகளுக்கும் விரிந்து சென்றுள்ளது. தற்போது புதிதாக சம்போ செந்தில் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சம்போ செந்தில் ஏற்கனவே திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரகுமார் கொலை, முத்தியால்பேட்டையில், ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியின் கூட்டாளி என்று சொல்லப்பட்ட விஜயகுமார் வெட்டிக் கொலை என்பன உள்ளிட்ட 4 கொலை  வழக்குகளில் தொடர்புடையர் என கூறப்படுகிறது. 

ஸ்கிராப் தொழில் போட்டியா.?

பிரபல ரவுடி சம்போ செந்தில் கடந்த 6 ஆண்டுகளாக கைதாகாமல் உள்ளார். வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழகத்தில் கொலை திட்டங்களை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி சென்னையில் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த தொழிலை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் ஆம்ஸ்ட்ராங்கை  கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில்  பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்ய சம்போ செந்திலுக்கு ஆம்ஸ்ட்ராங்  தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்போ செந்திலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முக்கிய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. 

Armstrong

வெளிநாட்டிற்கு தப்பிய சம்போ செந்தில்.?

இந்த கொலை தொடர்பாக சம்போ செந்திலை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். விமான நிலையங்களுக்கும் தேடப்படும் குற்றவாளி என லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், வெளிநாட்டிற்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பி சென்று விட்டாரா என போலீசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதே போல சம்போ செந்திலின் மனைவியும் வெளி நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலைக்கு பின்னனியில் சம்போ செந்தில் முக்கிய பங்கு உள்ளதா.? என்பது தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரியாமல் நீண்டு கொண்டே செல்கிறது.
 

Latest Videos

click me!