Mettur Dam Water Level : ஒரே நாளில் இத்தனை அடி நீர் அதிகரிப்பா.? மேட்டூர் அணையின் நீர் மட்டம் எவ்வளவு தெரியுமா

First Published Jul 21, 2024, 8:50 AM IST

மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்ததால் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கர்நாடக பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் 75ஆயிரம் கன அடி அளவிற்கு நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம்

தமிழக விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரம் மேட்டூர் அணையாகும். மேட்டூர் அணையால் காவிரி டெல்டா விவசாயிகள் அதிகளவு பயன்பெற்று வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் குடிநீர் தேவைக்கும் காவிரி நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பயன்பெறும். மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். 

தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடகா

ஆனால் இந்த ஆண்டு கர்நாடக பகுதியில் உரிய மழை இல்லாத காரணத்தால் அங்கு குடிநீர் பஞ்சத் ஏற்பட்டது. இதனை காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையிட்டது தொடர்ந்து குறைவான அளவு தண்ணீரே திறக்கப்பட்டது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது. இந்த நிலையில் தான் தற்போது கர்நாடக மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 

Tamilnadu Dam Water Level : தொடரும் மழை.! தமிழகத்தில் உள்ள அணைகளில் நீர் நிரம்பியதா.? நிலவரம் என்ன.?

Latest Videos


கனமழை - தண்ணீரை திறந்த கர்நாடகா

இதனால் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து தமிழகத்திற்கு முதலில் வினாடிக்கு 10ஆயிரம் கன அடி நீரும். தொடர்ந்து 20ஆயிரம் அடியாகவும் பின்னர் 75ஆயிரம் கன அடி அளவிற்கு நீர் திறக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் அதிகப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒக்கேனக்கல்லில் வெள்ளப்பெருக்க ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. 

கிடு, கிடுவென உயர்ந்த மேட்டூர் நீர்மட்டம்

இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7.6அடி உயர்ந்தது. ஒரே வாரத்தில் 26.15 அடி உயர்ந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 68ஆயிரம் கன அடியிலிருந்து 71.777 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் தற்போதையநீர்மட்டம் 69 அடியாக உள்ளது. வரும் நாட்களில் கர்நாடக மாநிலத்தில் பெய்யும் மழையை பொறுத்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Vegetables : காய்கறிகள் விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ தக்காளி, பீட்ரூட், வெங்காயம் என்ன விலை தெரியுமா.?

click me!