பெற்றோருக்கு வந்த சிறுமியின் புகைப்படம்; அலறி துடித்த பெற்றோர் - சென்னையில் பரபரப்பு

First Published | Jul 19, 2024, 5:15 PM IST

சென்னையில் பெற்றோர் கண்டித்ததால் சிறுமியுடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த இளைஞர் கைது.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் சிறுமிக்கு அதிக நேரம் செல்போன் பார்க்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே சிறுமிக்கு செல்போன் மூலமாக அதே பகுதியைச் சேர்ந்த உசேன் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். 

Tap to resize

மேலும் உசேனையும் அழைத்து தன் மகளுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளனர். இதனால் எரிச்சலடைந்த உசேன் சிறுமியின் பெற்றோரை பழிவாங்க நினைத்துள்ளார்.

இதன் விளைவாக சிறுமிக்கு உசேன் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இந்த விவகாரம் தெரிய வரவே, சிறுமியின் பெற்றோர் உசேனை கண்டுபிடித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உசேனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos

click me!