ooty
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் கொடுத்த மழை
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளு குளு இடங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு சில பொதுமக்கள் கோடை விடுமுறையை தவிர்த்து தற்போது சீசன் இல்லாத காலத்தில் பயணிக்க விரும்புவார்கள்.
ஆனால் அந்த மக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் வெளுத்து வாங்கிய மழை
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்த காரணமத்தால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி போன்ற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் உதகை கூடலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நிலச்சரிவு ஏற்பட்டு பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
Vegetables : காய்கறிகள் விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ தக்காளி, பீட்ரூட், வெங்காயம் என்ன விலை தெரியுமா.?
Ooty rain
நிலச்சரிவு- மக்கள் பாதிப்பு
குறிப்பாக உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் இத்தலார் பகுதியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கூடலூர் பகுதியில் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
இந்தநிலையில் உதகையில் கன மழைபெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதனிடையே நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்கள் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mettur Dam Water Level : ஒரே நாளில் இத்தனை அடி நீர் அதிகரிப்பா.? மேட்டூர் அணையின் நீர் மட்டம் எவ்வளவு தெரியுமா
tamilnadu heavy rain
தொலைபேசி எண் அறிவிப்பு
மேலும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகை கோட்டத்திற்கு 0423- 2445577, கூடலூர் கோட்டத்திற்கு 04262- 261295, உதகை வட்டத்திற்கு 0423-2442433,
குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252 மற்றும் பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.