யார் இந்த ஜான் ஜெபராஜ்? கோவையில் அவர் செய்த குற்றத்தின் பின்னணி என்ன?

Published : Apr 13, 2025, 12:57 PM ISTUpdated : Apr 13, 2025, 01:01 PM IST

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

PREV
14
யார் இந்த ஜான் ஜெபராஜ்? கோவையில் அவர் செய்த குற்றத்தின் பின்னணி என்ன?
Pastor John Jebaraj

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (35). இவர் கோவையில் கிங்ஸ் ஜெனரேஷன் என்ற தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வந்தார்.  கிறிஸ்தவ பாடல்களை பாடியது மட்டுமல்லாமல் நடனமாடி  வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தவர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மே 21-ம் தேதி கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் விருந்து வைத்துள்ளார். அதில் கலந்துகொண்ட14 மற்றும் 17 வயது  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

24
POCSO case against Pastor John Jebaraj

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். 

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் சிக்காமல் தப்பி ஓடிய மதபோதகர் ஜான் ஜெபராஜ்.! தட்டித்தூக்கிய போலீஸ்

34
Pastor John Jebaraj Arrest

மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக கோவை மாவட்ட காவல் துறை சார்பில் 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறக்கப்பட்டது. இந்நிலையில் மூணாறில் ஜான் ஜெபராஜ் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவக் கிடைத்தது. இதையடுத்து மத போதகர் ஜான் ஜெபராஜை இன்று காலை சுற்றிவளைத்த காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

44
Chennai High Court

விசாரணைக்கு வரும் முன்ஜாமீன் மனு

இதுகுறித்து காட்டூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இதனையடுத்து ஜான் ஜெபராஜை வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்துள்ள மனு வருகிற 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories