மக்கள் விரும்பும் அதிமுக,பாஜக கூட்டணி.! விமர்சித்தால் அவ்வளவுதான்- திமுகவை எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்

Published : Apr 13, 2025, 12:20 PM IST

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சனத்திற்கு ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் கூறினார்.

PREV
15
மக்கள் விரும்பும்  அதிமுக,பாஜக கூட்டணி.! விமர்சித்தால் அவ்வளவுதான்- திமுகவை எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்

RB Udhayakumar warns : அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக  முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டிலே மகிழ்ச்சி வெல்லும் கரைபுரண்டு ஓடக்கூடிய ஒரு காட்சியை நாம் இன்றைக்கு பார்க்க முடிகிறது. அதிமுக, பாஜகவுடன் இன்றைக்கு வெற்றிக் கூட்டணியை எடப்பாடியார் என்கிற ஒரு சாமானியர் ஒரு சரித்திரம் படைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி கூட்டணியை அமர்த்தியுள்ளார்.

25
ADMK BJP alliance

அதிமுக,பாஜக கூட்டணி- அச்சத்தில் ஸ்டாலின்

இதைகண்டு இன்றைக்கு நடுநடுங்கி போயிருக்கிறது ஆளுகிற திமுக அரசு,  இந்த கூட்டணி அறிவிப்பை இன்றைக்கு நாடு முழுவதும் வரவேற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின்,  கையில் இருக்கிற உளவுத்துறை கொடுத்திருக்கிற அறிக்கை இனி திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது என்கிற அந்த நடுக்கத்தில், அச்சத்திலே உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

எனவே ஸ்டாலினின் அறிக்கையை யாரும் பொறுப்பெடுத்த தயாராக இல்லை. தமிழக மக்களுக்காக உருவாக்கி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி இந்த ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது. 
 

35
AIADMK-BJP alliance confirmed for 2026 Assembly elections

பொறுத்துக்கொள்ள மனம் இல்லாதவர்கள்

மக்கள் விரும்பும் அந்த மகத்தான வெற்றி கூட்டணியை ஒரு எளிமையானவர் இன்றைக்கு வலிமையான கூட்டணி அமைத்திருக்கிறார், இன்றைக்கு  ஆச்சரியப்படத்தக்க, வரவேற்கத்தக்க மகிழ்ச்சி அடையக் கூடிய கூட்டணி அமைத்து காட்டியிருக்கிறார் .

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வஞ்சகர்கள் வசை பாடுவது, அதை பொறுத்துக்கொள்ள மனம் இல்லாதவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஏகடியும் செய்வதை, மனம் இல்லாத அந்த வஞ்சகர்களை பற்றி தமிழ்நாட்டு மக்கள் பொறுப்படுத்த போவதில்லை .
 

45
Edappadi Palaniswami explains about BJP allianc

தமிழகம் முழுவதும் போராட்டம்

இந்த கூட்டணியை குறித்து நீங்கள் தொடர்ந்து அவதூறாக பேசுகிறீர்கள் என்று சொன்னால்  எடப்பாடியார் ஆணைபெற்று தமிழக முழுவதும் கழக அம்மா பேரவை நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயங்க மாட்டோம்,  ஆகவே ஆரோக்கியமான விமர்சனம் ஒரு கூட்டணி அமைகிறது என்று சொன்னால் அதை ஆரோக்கியமாக விமர்சிக்க வேண்டுமே தவிர,

இது போன்ற அரசியல் நாகரிகம் இல்லாமல்  வார்த்தைகளை பயன்படுத்துவது தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்ததல்ல. நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி அமைத்து மத்தியிலே எத்தனை அமைச்சரவைகளை பெற்றீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது , 

55
ADMK BJP alliance

சட்டமன்ற தேர்தலில் சரித்திரம் படைக்கும்

ஆகவே நீங்கள் எத்தனை ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வைத்து நீங்கள் ஆட்சி கட்டிலில் அதிகாரத்தில் அமர்ந்திருந்தீர்கள் என்பதை மறந்து விட்டு பேசுகிற ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு மறதி நோய் வந்திருந்தால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பொறுப்பாக முடியாது,

ஆகவே ஒரு ஆரோக்கியமான கூட்டணி,  தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கிற கூட்டணி, தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்கிற கூட்டணியை எடப்பாடியாரின் தலைமையிலே அமைந்திருக்கிறது. இனி இந்த கூட்டணியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே சரித்திரம் படைக்கும் என கூறினார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories