மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை.! திடீர் டெல்லி பயணம்- இது தான் காரணமா.?

Published : Apr 13, 2025, 11:53 AM IST

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.

PREV
14
மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை.! திடீர் டெல்லி பயணம்- இது தான் காரணமா.?

Union Ministerial post for Annamalai : தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு கடும் போட்டியாக இருந்தார் தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, தினந்தோறும் அரசுக்கு எதிராக போராட்டம், ஊழல் குற்றச்சாட்டு, வீடியோ, ஆடியோ என அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே நேரத்தில் தமிழகத்தில் கூட்டணி கட்சியான அதிமுக தலைவர்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்தையும் கூறியிருந்தார்.

இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி முறிவுக்கு வந்தது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.

24
Annamalai Vs Stalin

தமிழக அரசியலில் அண்ணாமலை

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணியானது உருவாகியுள்ளது. மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உறுதிப்படுத்தினார். அதே நேரம் அதிமுக தலைவர்களுக்கும்- அண்ணாமலைக்கும் இடையே மோதலானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் காரணமாக அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
 

34
Amit Shah speaking about Annamalai

அண்ணாமலைக்கு கட்சியில் பொறுப்பு

இதன் படி, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.  தமிழிசை சவுந்தரராஜன், எச் ராஜா, சரத்குமார், கரு நாகராஜன் மற்றும் ராம சீனிவாசன் வானதி சீனிவாசன், எல் முருகன் மற்றும் கே பி ராமலிங்கம் ஆகியோரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அண்ணாமலை அவசர அவசரமாக இன்று காலை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். எனவே  மாநில தலைவராக இருந்து தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு பெரிய அளவில் பங்கு வகித்த அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

44
annamalai

மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை

அந்த வகையில் பாஜக 3வது முறையாக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படி அண்ணாமலைக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக டெல்லி பாஜக வட்டார தகவல் தெரியவந்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories