விவசாயிகள் உடனே இதை செய்யுங்கள்.! வேளாண்மை துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published : Apr 13, 2025, 10:47 AM IST

தமிழகத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் பாதிப்பால் விளைச்சல் குறைந்துள்ளது. வேளாண்மைத் துறை, வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முறைகளை அறிவித்துள்ளது.

PREV
14
விவசாயிகள் உடனே இதை செய்யுங்கள்.! வேளாண்மை துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Whiteflies in coconut trees : விவசாயம் தான் நாட்டின் ஆணிவேராக உள்ளது. அந்த வகையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இழப்பீட்டு நிவாரணம், எந்த காலத்தில் எந்த பயிர் பயிரிடுவது போன்ற ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தென்னை மரத்தில் வெள்ளை ஈக்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னை இலைகள் பாதிக்கப்பட்டு விளைச்சர் சரிந்துள்ளது. இந்த நிலையில் வெள்ளை ஈக்கள் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. 

24
Coconut whitefly control

வெள்ளை ஈக்கள் பாதிப்பு

இதன்  தென்னை மரத்தை தாக்கும் வெள்ளை ஈக்களில் இருந்து கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண்மை -உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, 

தென்னையில் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துதல்

தென்னங்கீற்றுகளின் அடிப்பரப்பை நோக்கி தண்ணீரை பிய்ச்சி அடிக்கவும்.

மஞ்சள் ஒட்டுப்பொறி ஏக்கருக்கு 20 வீதம் கட்டவும்
 

34
Coconut Tree

வழிமுறைகள் என்ன.?

அபெர்டோகிரைசா இரைவிளுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் கீற்றுகளில் கட்டவும்

என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் கட்டவும்

ஒரு லிட்டர் தண்ணீரில், வேப்பெண்ணெய் - 5 மில்லி / மீன் எண்ணெய் கரைசல் 2 மில்லியுடன் ஒட்டும் திரவத்தை கலந்து தெளிக்கவும்

44
Agriculture department advice

ரசாயன பூச்சிக்கொல்லி

கரும்பூசணத்தை நீக்க 25 கிராம் மைதா மாவுப் பசையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

இயற்கை எதிரிகளை பாதுகாக்க இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்

பரிந்துரைக்கப்பட்ட உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி முறையாக பராமரிக்கவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories