பாலியல் தொல்லை புகாரில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மூணாறில் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
John Jebaraj arrest : கோவையைச் சேர்ந்தவர் பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ். இவர் ராப் பாடல்கள் மூலம் கிறிஸ்துவ மத போதனைகளை செய்து வந்தார். சமீப காலங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தவர். நவ நாகரிக பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும் மத போதனை செய்து வந்தார்.
இவரது மத போதனைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஜான் ஜெபராஜின் மாமனார் 17 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த சிறுமியையும், அவரது வீட்டில் அருகில் வசித்து வரும் 14 வயது சிறுமியையும் மத போதனை நிகழ்ச்சிக்கு ஜான் ஜெபராஜ் அழைத்து சென்றுள்ளார்.
24
POCSO case against Pastor John Jebaraj
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
அப்போது அந்த சிறுமிகளுக்கு மத போதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்த நிலையில், கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில், மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தனிப்படையினர் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
34
Pastor John Jebaraj arrested
ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு
மேலும் மத போதகர் ஜான் ஜெபராஜ் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஜான் ஜெபராஜை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயன்றனர்.
44
John Jebaraj arrest
ஜான் ஜெபராஜ் கைது
அந்த வகையில், செல்போன் எண்ணை கொண்டு,அதில் யாரிடமெல்லாம் பேசியுள்ளார் என்பது குறித்தும், கடைசியாக இங்கு அந்த செல்போன்னில் இருந்து யாரிடம் பேசப்பட்டுள்ளது என்பது குறித்தும் தனிப்படை போலீசார் ஆய்வு நடத்தி வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு மூணாறு பகுதியில் வைத்து மத போதகர் ஜான் ஜெபராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.