ஆபாச அமைச்சர் பொன்முடி! அறிவாலயம் உருத்தெரியாமல் அழியும் காலம் நெருங்கிவிட்டது! கொதிக்கும் எச்.ராஜா!

Published : Apr 13, 2025, 11:42 AM ISTUpdated : Apr 13, 2025, 11:54 AM IST

திமுக அமைச்சர் பொன்முடி சைவ வைணவ சமயங்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அறிவாலயம் உருத்தெரியாமல் அழியும் காலம் நெருங்கிவிட்டது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

PREV
15
ஆபாச அமைச்சர் பொன்முடி! அறிவாலயம் உருத்தெரியாமல் அழியும் காலம் நெருங்கிவிட்டது! கொதிக்கும் எச்.ராஜா!
Minister Ponmudi

ஆபாச அமைச்சர் பொன்முடி

திமுக மூத்த அமைச்சர் பொன்முடி சைவ வைணவ சமயங்களை மட்டுமல்ல பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் அளவுக்கு ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து அவரிடம் இருந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவரது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில்  இந்துக்களை மட்டம் தட்டுவதையும் அவர்களின் நம்பிக்கைகள் மீது அமிலம் கொட்டப்படுதையும் தொடர்ந்து ஆதரித்து வரும் அறிவாலயம் உருத்தெரியாமல் அழியும் காலம் நெருங்கிவிட்டது என எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில்லாத ஒருவர் எப்படி அமைச்சராக மட்டும் இருக்கலாமா? வானதி சீனிவாசன்!

25
H.Raja

பொட்டு வைக்காதே, திருநீற்றை அழித்துவிடு என்று பிரச்சாரம்

இதுதொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்: போன வாரம் பொட்டு வைக்காதே, திருநீற்றை அழித்துவிடு என்று பிரச்சாரம் செய்த அறிவாலயத்தின் இந்துமத விரோதிகள், இந்த வாரம் பல்லாண்டுகால தொன்மையான சைவ-வைணவ அடையாளங்களுக்கு “நிற்பது, படுப்பது” என வக்கிரமாக அர்த்தம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

35
H.Raja Vs DMK

அறிவாலயம் தான் ஆபாச பேச்சாளர்களின் கூடாரமாயிற்றே

அதுவும் ஒரு விலைமாது வீட்டில் சைவம், வைணவம் குறித்த உரையாடல் நடப்பதை நேரில் சென்று பார்த்தது போல விலாவாரியாக விளக்கும் ஆபாச அமைச்சர் பொன்முடி வெள்ளையும் சொள்ளையுமாக நித்தம் எங்கு சென்று வருகிறார் என்ற சந்தேகம் இப்போது தமிழக மக்கள் மனதில் வலுப்பெறுகிறது. தமிழகப் பெண்களைப் பார்த்து “ஓசி” என்று இளக்காரமாக பல்லிளித்த போதே அவரின் அமைச்சர் சீட்டைக் கிழித்து இருந்தால், இன்று தமிழின் பழம்பெரும் சமயங்களைப் பற்றி கீழ்த்தரமாக பேச அவருக்கு நா எழுந்திருக்காது. ஆனால், அறிவாலயம் தான் ஆபாச பேச்சாளர்களின் கூடாரமாயிற்றே?

இதையும் படிங்க:  அமைச்சர் பொன்முடியின் கீழ்த்தரமான பேச்சு! இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு! தயாராகும் அதிமுக மகளிர் அணி!

45
Minister Regupathy

அமைச்சர் ரகுபதி

இப்போது கூட கட்சி நடவடிக்கை என்ற பெயரில் அதிகாரமிக்க அமைச்சர் பதவியை விட்டுவிட்டு, திமுக-வில் பத்து பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாத பொதுச் செயலாளர் பதவியைப் பிடுங்கி போக்கு காட்டுகிறார் மு.க.ஸ்டாலின் “பேசும் போது ஸ்லிப் ஆகியிருக்கும்” என ஆபாச அமைச்சருக்கு முட்டுக் கொடுக்கிறார் திமுக-வின் மற்றொரு அமைச்சர் ரகுபதி. 

55
H.Raja Slams DMK

அறிவாலயம் உருத்தெரியாமல் அழியும் காலம் நெருங்கிவிட்டது

ஆக மொத்தத்தில் இந்துக்களை மட்டம் தட்டுவதையும் அவர்களின் நம்பிக்கைகள் மீது அமிலம் கொட்டப்படுதையும் தொடர்ந்து ஆதரித்து வரும் அறிவாலயம் உருத்தெரியாமல் அழியும் காலம் நெருங்கிவிட்டது என்பதை தமிழக மக்கள் என்றோ உணர்ந்துகொண்டனர். பாவம் அறிவாலயத்தின் அடிமைகளுக்குத் தான் அந்த உண்மை இன்னும் புலப்படவில்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories