யார் இந்த ஆதவ் அர்ஜூனா.? திமுக மேல் கோபம் ஏன்.? இது தான் காரணமா.?

First Published | Dec 9, 2024, 2:04 PM IST

கூடைப்பந்து வீரராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆதவ் அர்ஜூனா, அரசியல் வியூக நிபுணராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நபராகவும் உயர்ந்தார். திமுக அரசு மீதான அவரது விமர்சனங்கள் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

Aadhav Arjuna

ஆதவ் அர்ஜூனா யார்.?

தமிழக அரசியலில் சமீப காலமாக உச்சரிக்கும் பெயர் ஆதவ் அர்ஜூனா, யார் இவர்.? 1982ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள விவசாய குடும்பத்தை பிறந்தார்.  தனது ஆரம்பக் கல்வியை ஒய்.டபள்யூ.சி.ஏ வில் முடித்த இவர், திருச்சி இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் உயர்கல்வி பயின்றார். இதனையடுத்து  மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அப்போது கூடைப்பந்து மீதான ஆர்வம் காரணமாக பல போட்டிகளிலும் கலந்து கொண்டு கோப்பைகளை வாங்கியுள்ளார். இந்திய கூடை பந்து அணிக்காகவும் விளையாடியுள்ள ஆதவ் அர்ஜூனா,
 

Aadhav Arjuna

பிரபல தொழிலதிபரின் மருமகன்

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கூடைப்பந்து சங்க தேர்தலில் வெற்றி பெற்று அச்சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இதிலும் முக்கியமாக கோவையை சார்ந்த பிரபல லாட்டரி சீட்டு அதிபரான மார்ட்டினின் மகளான டெய்சியை இவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் அமலாக்கத்துறை மார்ட்டின் வீடுகளில் சோதனை நடக்கும் போதெல்லாம் ஆதவ் அர்ஜூனா வீடுகளிலும் சோதனை நடைபெறும்.

Tap to resize

Aadhav Arjuna

திமுகவின் வெற்றியில் பங்கு

பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தமிழக அரசியல் களத்தையும் கணித்துள்ளார். அந்த வகையில் 2016, 2019 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுகவின் அரசியல் வியூக வல்லுநராகவும் ஆதவ் ஆர்ஜூனா பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும்   'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பை தொடங்கி அதன் மூலம் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிகழ்வுகளை இந்த    'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பு நடத்திவுள்ளது. அப்போது அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஆதவ் அர்ஜூனா,

Aadhav Arjuna

துணை பொதுச்செயலாளார ஆதவ் அர்ஜூனா

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வளர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.  திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டை ஆதவ் அர்ஜுனா பொறுப்பேற்று நடத்தினார்.  இதன் மூலம் கட்சியில் நிர்வாகிகள் முதல் தொண்டர் வரை அறியப்படும் பெயராக ஆதவ் அர்ஜுனா உருவானார். மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து  விடுதலை சிறுத்தை கட்சியின் 10 துணைப் பொதுச் செயலாளர்களில்  ஒருவராகவும் ஆதவ் அர்ஜூனாவை  திருமாவளவன் நியமித்தார்.

Aadhav Arjuna

ஆதவ் அர்ஜூனுக்காக சீட் கேட்ட திருமா

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இழு பறியாகவே அமைந்தது.  இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி ஒரு பொதுத் தொகுதி கேட்டது தான், குறிப்பாக கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக ஆதவ் அர்ஜூனாவை நிறுத்த விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டது.

ஆனால் திமுகவோ விடாப்பிடியாக பொது தொகுதியை வழங்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தான் திமுக மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதவ் அர்ஜூனா கூற தொடங்கினார். தினந்தோறும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.

Aadhav Arjuna

திமுகவிற்கு எதிரான பேச்சு

கடைசியாக அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி மூலம் திருமாவளன் மற்றும் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை ஒன்றாக மேடை ஏற்ற திட்டமிட்டார். ஆனால் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்யோடு மேடை ஏற திருமாவளவன் தயங்கினார். இந்த சூழ்நிலையில் தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் திமுக ஆட்சி மன்னராட்சி, 2026ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் என பேசி பரபரப்பை கிளப்பினார்.

இவரது பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தலை தூக்கியது. அடுத்ததாக திமுக கூட்டணியோடு முறிவு ஏற்படும் நிலையும் உருவானது. இந்த நிலையில் தான் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாதம் நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். 
 

Latest Videos

click me!