Aadhav Arjuna
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ளது திமுக, இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பு வழங்கப்பட்ட ஆதவ் அர்ஜூனன், திமுகவிற்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் 2026ஆம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு வரும் என தெரிவித்தார். இந்த கருத்து திமுக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்தார்.
Aadhav Arjuna
இந்தநிலையில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
கட்சியின் துணை அண்மைக் பொதுச்செயலாளர் திரு.ஆதவ்அர்ஜுனா அவர்கள் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
Aadhav Arjuna removed from VCK
கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள்,மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
Thiruma removed Aadhav Arjuna
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.