எல்லாத்திற்கும் காரணமே திமுக தான்.! இப்போ நாடகம் போடுது.! அண்ணாமலை அதிரடி

Published : Dec 09, 2024, 09:57 AM ISTUpdated : Dec 09, 2024, 10:15 AM IST

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் தவறான தகவல்களால் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

PREV
14
எல்லாத்திற்கும் காரணமே திமுக தான்.! இப்போ நாடகம் போடுது.!  அண்ணாமலை அதிரடி
Madurai tungsten mine

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்

மதுரையில் அரிட்டாபட்டி மற்றும்  நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குகடிதம் எழுதினார்.

அதில்  டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கை விட வேண்டும் என கேட்டிருந்தார். குறிப்பாக குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துகள் மற்றும் பஞ்சபாண்டவர் கல்படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு அரிட்டாபட்டி கிராமம் பிரபலமானது என தெரிவித்திருந்தார்.

24
stalin narendra modi

தமிழக அரசு எதிர்ப்பு

இதனிடையே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக சட்டசபையில் தீர்மானமும் இன்று இயற்றப்படவுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து  மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல்,  

34
Annamalai statement

மத்திய அரசுக்கு பாஜக கடிதம்

மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

இதனையடுத்து  மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.  

44
Annamalai Madurai tungsten mine

நாடகம் ஆடும் திமுக

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. 

பிரதமர் மோடியின்  நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் அவர்கள் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories