Encounter : யார் இந்த திருவேங்கடம்.? பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் கொலையிலும் தொடர்பா.? வெளியான பகீர் பின்னனி

First Published Jul 14, 2024, 8:47 AM IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்தகொலைக்கு திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே திருவெங்கடம் 3 கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.  முக்கிய குற்றவாளியாக சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

Armstrong

யார் இந்த திருவேங்கடம்.?

போலீஸ் விசாரணையில் திருவேங்கடம் பல்வேறு உண்மைகளை காவல்துறையிடம் தெரிவித்ததின் அடிப்படையில்,  அதன் புலன் விசாரணைக்காக தடயங்களை சேகரிப்பதற்காக திருவேட்கடத்தை  மாதவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் அவர் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதாக தெரிய வருகிறது. இதனையடுத்து போலீசார் அவரை சரணடையுமாறு பலமுறை எச்சரிக்கை செய்துள்ளனர். 

Latest Videos


armstrong murder case

3 ரவுண்ட் சுட்ட போலீஸ்

ஆனால் அவர் சரணடைய மறுத்து வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக அவரை 3 ரவுண்டுகள் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலையே ரவுடி திருவேங்கடம் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டாண்டில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வேவு பார்த்த திருவேங்கடம்

சுட்டுக் கொலை செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியான அருள் என்பவரின் உயிர் நண்பர் ஆவார். இவர்தான் ஆம்ஸ்ட்ராங்கை  கொலை செய்ய  திட்டங்கள் தீட்டியது மற்றும் கொலைக்காக வேவு பார்த்தது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதான ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நடந்தது என்ன?

Chennai Armstrong

தென்னரசு கொலையிலும் திருவேங்கடம்

மேலும் திருவேங்கடம் கடந்த 2015ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் தென்னரசு கொலையிலும் முக்கிய குற்றவாளி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் பெயரில் 3 கொலை வழக்குகளும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
 

click me!