Vegetable : குறைந்ததா காய்கறி விலை.!! ஒரு கிலோ தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விலை என்ன.?

First Published | Jul 14, 2024, 8:07 AM IST

காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது காய்கறி சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் உற்பத்தி குறைவால் காய்கறிகளின் வரத்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு குறைந்துள்ளதால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது அதிகரித்துள்ளது.  

vegetables

பீட்ரூட் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய் முதல்  45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தமிழகத்தில் 9 மாவட்டங்ககளுக்கு குட் நியூஸ்! அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!
 

Tap to resize

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ബ്രൊക്കോളി

பீர்க்கங்காய் விலை என்ன.?

மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

Latest Videos

click me!