sasikala eps
அதிமுக அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல தலைவர்கள் பிரிந்து சென்று தனித்து செயல்படுவதால் வாக்குகள் சிதறி தோல்வியே கிடைத்தது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக அதிமுக தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என ஒரு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மூத்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது.
வெற்றிக்கான வியூகம் என்ன.?
அப்போது அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பேச்சு எழும் எதிர்பார்க்கப்பட்டது. நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். தோல்விக்கான காரணம் குறித்து விரிவாக கேட்டறிந்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து தற்போதிலிருந்தே களப்பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தனியாக ஆலோசனை
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் என பேசியதாகவும், கட்சியில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று மாலை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தமிழ் மகன் ஹுசேன் புறப்பட்டு சென்றபின், முனுசாமி - வேலுமணி மட்டும் தனியாக 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.