Vegetables Price : உயரும் காய்கறிகளின் விலை.! தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

First Published | Jul 12, 2024, 7:32 AM IST

காய்கறிகளின் வரத்தை பொறுத்தை விற்பனை விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுகிறது. அந்த வகையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதே போல உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பீன்ஸ் விலையும் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

உருளைக்கிழங்கு விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருந்தாத TTF வாசன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் வேலை காட்டியதால் ஆப்பு! தேவஸ்தானம் அதிரடி! நடந்தது என்ன?
 

முருங்கைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

Tap to resize

சின்ன வெங்காயம் விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
 

மாங்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 40 முதல் 50 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,மாங்காய் 50 ரூபாய்க்கும், சுரைக்காய் 30 ரூபாய்க்கும்,  குடை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

Latest Videos

click me!