Armstrong murder case: ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர்.! யார் இந்த அருள்-வெளியான புதிய தகவல்

First Published | Jul 12, 2024, 2:49 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் ஒருவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

Armstrong

ஆம்ஸ்ட்ராங் கொலை

வட சென்னையில் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சிக்காக பெரிதும் உதவியுள்ளார். இந்தநிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கட்டி வரும் வீட்டிற்கு முன்பாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Armstrong

கொலைக்கு காரணம் என்ன.?

இந்த சூழ்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் முக்கிய பங்கு வகித்ததால் இதற்கு பழி வாங்கவே கொலை செய்தததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 

Tap to resize

Armstrong

10 நாட்களாக திட்டம்

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு 10 நாட்களாக இவர்கள் நோட்டமிட்டதும், பெரம்பூரில் உள்ள மதுபானக்கடை  ஒன்றில் மது அருந்தியபடியே திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளனர். மேலும் குறிவைத்து கழுத்து, தொடை, கணுக்கால் நரம்பு ஆகிய பகுதிகளில் வெட்ட முடிவு செய்ததாக கூறியுள்ளனர். மேலும் கொலை நடக்கும் இடத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே வந்ததாகவும் அந்த பகுதியில் மக்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்ததாக தெரிவித்துள்ளனர். 

கொலைக்கு முக்கிய காரணம் யார்.?

இதனிடையே இந்த கொலை வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் அருளை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஆற்காடு சுரேஷின் வலது கரமாக 12 வருடங்கள் உடன் இருந்துள்ளார். மேலும் ஆற்காடு சுரேஷின் மைத்துனர் என கூறப்படுகிறது. கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்ததும் அருள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கை  கொலை செய்த கத்திகளை திருநின்றவூரில் உள்ள அருளின் நண்பர்களாக உள்ள தற்போது பிடித்து விசாரணை செய்யும் மூன்று நபர்கள் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Latest Videos

click me!