Published : Mar 26, 2025, 05:38 PM ISTUpdated : Mar 27, 2025, 11:40 AM IST
Power Cut in Tamil Nadu: கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் மின்தடை என்பது இல்லை. இந்நிலையில் நாளை மின்தடை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.
மின்சாரம் இல்லாத காலம் போய் தற்போதைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக நாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் மேற்கொள்வது வழக்கம்.
25
TNEB
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். இந்த சூழலில் தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கியுள்ளதால் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மின்பயன்பாடு அதிகரிக்கும். இதனால் வழக்கத்தை விட மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதால் பல இடங்களில் மின் தடை ஏற்படும்.
இந்த சூழலில் கடந்த சில வாரங்களாகவே மின்தடை என்பது முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவடைந்த நிலையில் நாளையுடன் 11ம் வகுப்பு தேர்வு முடிவடைகிறது. இதனையடுத்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது.
45
Public exam
ஆகையால் மாணவர்களின் நலன் கருதி அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம். அதாவது இதுவரை மின் தடை தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தேர்வுகள் முடியும் வரை இன்னும் சில வாரங்களுக்கு வழக்கமான மின் தடை இருக்காது என்று கூறப்படுகிறது.