அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இது தான் காரணம் .? வெளியான பரபரப்பு தகவல்

Published : Apr 10, 2025, 12:08 PM IST

வன்னியர் சங்கத்திலிருந்து உருவான பாமக, கூட்டணி மாற்றங்களால் பல தேர்தல்களில் தோல்வியடைந்தது. அன்புமணியின் முடிவுகளால் அதிருப்தியடைந்த ராமதாஸ், அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதால் கட்சி உடையும் நிலைக்கு வந்துள்ளது.

PREV
16
அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இது தான் காரணம் .? வெளியான பரபரப்பு தகவல்

 Ramadoss Anbumani conflict : வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் தான் 1989ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாக வலுப்பெற்றுள்ளது.

பாமக ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வந்தது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தால், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும்.

26

பாமகவின் கூட்டணி மாற்றம்

இதற்கிடையே அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை எந்தவித கூட்டணி இல்லாமல் தனித்து சந்தித்தது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்  பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது.  

ஆனால் இந்த சட்ட மன்ற தேர்தலில் எந்த தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறவில்லை. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது பாமக போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியை தழுவியது. 

36

 பாமக தலைவர் பதவியில் அன்புமணி

அடுத்ததாக கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

இதற்கிடையே பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு பாமக தலைவராக அன்புமணியை நியமித்தார் ராமதாஸ், இதன் காரணமாக பாமகவின் தேர்தல் கூட்டணி தொடர்பாக அன்புமணியே  முடிவெடுத்து வந்தார்.

46

அதிருப்தியில் ராமதாஸ்

அந்த வகையில் அன்புமணியின் கூட்டணி தொடர்பான முடிவு, கட்சியில் நிர்வாக நடவடிக்கை ராமதாஸுக்கு பிடிக்கவில்லையென கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் விரும்பிய நிலையில், அன்புமணி பாஜக கூட்டணியில் இணைந்தார். இதுவே அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் குறைந்த பட்சம் 2 முதல் 4 தொகுதிகளை பாமக கைப்பற்றியிருக்க கூடும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டது.

56
anbumani ramadoss

நேரடியாக மோதிக்கொண்ட ராமதாஸ்- அன்புமணி

அடுத்ததாக பாமக இளைஞர் அணி தலைவர் பதவிக்கு தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். இந்த நியமனத்திற்கு அன்புமணி நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். பாமக பொதுக்குழு கூட்டத்திலையே இந்த மோதல் அனைவரின் மத்தியிலும் நிகழ்ந்தது. இ

தனையடுத்து இரு தரப்பும் பேச்சுவார்தைத நடத்தி சமாதானம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், பனையூரில் புதிய அலுவலகத்தை தொடங்கினார் அன்புமணி,

66

அன்புமணி நீக்கம் ஏன்.?

இது போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகள் ராமதாஸை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் கட்சி தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் தன்னிடம் ஆலோசிக்கவில்லையென ராமதாஸ் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைடுத்து தான் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ்,

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியைநீக்குவதாக  அறிவித்துள்ளார். இந்த முடிவால் பாமக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிலையில், அடுத்த கட்ட முடிவு என்ன என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories