இன்று தமிழகம் வரும் அமித்ஷா.! யாரையெல்லாம் சந்திக்கிறார்.? திட்டம் என்ன.?

Published : Apr 10, 2025, 10:42 AM IST

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை உறுதி செய்ய அமித்ஷா சென்னை வருகிறார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை அவர் சந்திக்கவுள்ளார். பாஜக தலைவர் நியமனம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

PREV
14
இன்று தமிழகம் வரும் அமித்ஷா.! யாரையெல்லாம் சந்திக்கிறார்.? திட்டம் என்ன.?

ADMK BJP alliance : தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க அதிமுக, பாஜக முயன்று வருகிறது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணியை முடிவு செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. பலம் பொருந்திய திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவும் மிகப்பெரிய அளவிலான கூட்டணியை அமைக்க திட்டமிட்டது.

இதற்காக முதலில் தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளதால் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க போவதில்லையென தெரிவித்து விட்டார் விஜய்,

24
ADMK BJP alliance

அதிமுகவின் கூட்டணி திட்டம்

இதன் காரணமாக மாற்று வழியை யோசித்த அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள காய் நகர்த்தியது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியை முறித்து தனி அணியாக தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியே கிடைத்தது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இணைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்தது

34
Edappadi Palaniswami and Amit Shah

சென்னை வரும் அமித்ஷா

இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் வகையில் அமித்ஷா இன்று இரவு சென்னை வருகிறார். சென்னையில் நட்சத்திர விடுதியில் இன்று இரவு தங்கும் அவர், முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

அந்த வகையில் தமிழகத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக துக்ளக் எடிட்டர் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசிக்கிறார். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், ஜி,கே.வாசன், அன்புமணி ஆகியோரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

44
Amit Shah Chennai visit

பாஜக புதிய தலைவர் யார்.?

இதனை தொடர்ந்து பாஜக மூத்த நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா, தமிழக பாஜக புதிய தலைவர் யாரை நியமிக்கலாம் என கருத்து கேட்பார் என தெரிகிறது. அந்த வகையில் தற்போது முன்னிலையில் நயினார் நாகேந்திரன், வானிதி சீனிவாசன், தமிழிசை பெயர்கள் அடிபடுகிறது.

மேலும் இந்த 3 பேரையும் தவித்து புதிதாக ஒருவரை மாநில தலைவராக நியமிக்கலாமா.? எனவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே அமித்ஷாவின் இரண்டு நாள் தமிழக பயணத்தில் அதிமுகவுடன் கூட்டணி, பாஜக புதிய தலைவர் நியமனம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories