Ramadoss Anbumani clash : தமிழகத்தில் திமுக- அதிமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் பாமக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த தேர்தலில் தருமபுரி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
இந்த நிலையில் பாமக நிறுவனராக உள்ள ராமதாசுக்கும், தலைவராக உள்ள அன்புமணிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் அணி தலைவர் நியமனம் செய்யப்பட்டப்போது பகிரங்கமாக வெளிப்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதான உடன்பாடு ஏற்பட்டது.
Breaking News | நானே பாமக தலைவர் - தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு !