கொட்டும் மழை- உயரும் நீர்மட்டம்
தமிழகத்தில் கோடை காலம் மக்களை வாட்டி வதைத்தது. எப்போது இல்லாத வகையில் அனல் காற்று வீசியதால் வெளியே கூட செல்ல முடியாத நிலை நீடித்தது. இதனால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள், அனைகள் வறண்டு காட்சியளித்தது. விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேட்டூர் அணை வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் கேரளா மற்றும் கர்நாடாகவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் தற்போது கிடைத்து வருகிறது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகளான கபினி மற்றும் கேஎஸ்ஆர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்து உபரிநீர் 75,748 கன அடி திறக்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 45ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் குளிக்கவும் 4வது நாளாக தடை விதித்துள்ளது.
மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு
ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள் நிலையில் சேலம் மாவட்டம்.மேட்டூர் அணையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நீர்வரத்து வினாடிக்கு 31,102 கன அடியிலிருந்து 40,018 கன அடியாக அதிகரித்துள்ளது.தற்போது நீர்மட்டம் 55.12 அடியாகவும், நீர் இருப்பு 21.18 டி.எம்.சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்! திருப்பூர், தேனி, உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் இன்று சம்பவம் இருக்காம்!
bavani
வெள்ள அபாய எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து நான்காவது நாளாக உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 14,000கன அடி தண்ணீர் அணையின் 4மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையில் நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகள் நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்தவரை, பாபநாசம் அணையில், உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 116.55 அடியாக உள்ளது. நீர் வரத்து : 1907.546 கன அடியாகவும், வெளியேற்றம் : 1104.75 கன அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் 156 அடியில் நீர் இருப்பு 129.53 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணையின் உச்சநீர்மட்டம் 118 அடியில் தற்போது நீர் இருப்பு 72.73 அடியாகவும், நீர் வரத்து : 158 கனஅடியாகவும் 200 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 15.50 அடியாக உள்ளது. நம்பியாறு அணையில் உச்சநீர்மட்டம்: 22.96 அடியாகவும், நீர் இருப்பு: 13.12 அடியாக உள்ளது.