Ops ஸ்டாலின் திடீர் சந்திப்பு..! பேசியது என்ன.? கூட்டணிக்கு வாய்ப்பு.?

Published : Jul 31, 2025, 12:35 PM ISTUpdated : Jul 31, 2025, 01:47 PM IST

 ஓ.பன்னீர் செல்வம், பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
தேர்தல் களத்திற்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் திமுக தனது கூட்டணியில் எந்த வித சேதாரம் இல்லாமல் வருகிற சட்டமன்ற தேர்தல் வரை கொண்டு செல்லும் வகையில் காய் நகர்த்தி வருகிறது. மேலும் திமுக கூட்டணியில் தற்போது புதிதாக மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. 

அடுத்தாக இன்னும் ஒரு சில கட்சிகள் இணையும் என கூறப்படுகிறது. அதே வேளையில் அதிமுகவும் திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணியை முறித்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

24
ஓபிஎஸ்யை கைவிட்ட பாஜக

அடுத்ததாக பாமக, தேமுதிக என ஒரு சில கட்சிகளோடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஆனால் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலம் இருப்பதால் இன்னும் நேரம் இருப்பதாக அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகிறது. '

அதே நேரம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தினார். இறுதியாக பாஜகவையும் நம்பினார். ஆனால் எடப்பாடியுடன் கை கோர்த்த பாஜக, ஓ.பன்னீர் செல்வத்தை கை கழுவிவிட்டது. இதனால் அதிருப்தியில் உள்ள ஓ,பன்னீர் செல்வம் பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்

34
ஓபிஎஸ் எடுக்கப்போகும் புதிய முடிவு.?

இரண்டு தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி கொடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இன்று பாஜக கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விலகியது வரலாற்று பிழை இல்லை, வரலாற்று புரட்சி என நேரடியாக அட்டார் செய்துள்ளார். எனவே தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற ஓபிஎஸ் திட்டமிட்டதாகவே கூறப்படுகிறது. 

அடுத்ததாக நடிகர் விஜய்யின் தவெக அல்லது சீமானின் நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினோடு ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை முடிவடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

44
ஸ்டாலின் ஓபிஎஸ் சந்திப்பு

அந்த வகையில் இன்று சுமார் 10 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அடையாறில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி சென்றார். அப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வந்துள்ளார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் உடல்நிலை தொடர்பாக கேட்டறிந்துள்ளார். 

முதலமைச்சரும் உடல்நிலை தொடர்பாகவும் எடுக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினும் ஓ.பன்னீர் செல்வத்தின் உடல் நிலை தொடர்பாக விசாரித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைவாரா..? என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories