தமிழகத்தில் ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரே வாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் கார்டுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நியாயவிலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி, பச்சரிசி, கோதுமை, சக்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் பல லட்சம் வீடுகளில் உணவுக்கு வழி அமைத்து கொடுக்கப்படுகிறது.
எனவே இந்த உணவுப்பொருட்களை பெறுவதற்கு ரேஷன் அட்டை முக்கியமானதாகும். தமிழகத்தில் 33,222 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் தோராயமாக 2.2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவை மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்
24
அடையாள அட்டையாக ரேஷன் கார்டு
ரேஷன் அட்டைகள் உணவு பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமில்லாமல் அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் கார்டு முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைக் கொண்டிருப்பதால், இது முகவரிச் சான்றாகவும், அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் அரசின் திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் அட்டை பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக மழை வெள்ள பாதிப்பின் போது நிவாரண உதவிகள் வழங்க கண்டிப்பாக தேவைப்படுகிறது. பொங்கல்,தீபாவளி பரிசு தொகுப்பு பெறுவதற்கும் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே அரசின் உதவிகள் கிடைக்கும்.
34
மகளிர் உரிமை தொகை பெற ரேஷன் கார்டு
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அடையாள அட்டையாக உள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கார்டு பெறுவதற்காக பல லட்சம் மக்கள் விண்ணப்பித்து காத்துள்ளனர்.
அந்த வகையில் தமிழக அரசின் www.tnpds.gov.in இணையதளத்தில் விண்ணப்பிதுள்ளனர். ஆனால் பல கட்ட நடைமுறைகள் முடிந்து ரேஷன் கடைகள் கிடைக்க பல மாதங்கள் ஆகும் நிலை ஏற்படுகிறது. மேலும் ரேஷன் கார்டின் நிலை தொடர்பாக அறிய தினந்தோறும் உணவு பொருட்கள் வழங்கல் அலுவகத்திற்கு அழைய வேண்டியதே பெரிய தலைவலியாக உள்ளது.
இந்த நிலையில் தான் ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்த ஒரே வாரத்தில் ரேஷன் கார்டு தொடர்பாக விசாரணையை வீட்டிற்கே வந்து விசாரிக்க அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனர். அடுத்த சில வாரங்களில் ரேஷன் கார்டுகள் கிடைத்து விடும் என தகவல் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 46 சேவைகளுக்கு தீர்வானது கிடைத்து வருகிறது.
அந்த வகையில் ரேஷன் கார்டு தொடர்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அதிகாரிகள் வீட்டிற்கே வந்து விசாரணை முடிந்து கார்டும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்த மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 45 நாட்களுக்குள் ரேஷன் கார்டுகள் கைகளில் வந்துவிடும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.