Vegetables Price : தக்காளி, கேரட், இஞ்சி விலை அதிகரிப்பு.! திடீரென காய்கறி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

First Published | Jul 24, 2024, 7:11 AM IST

சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலையானது கூடி குறைந்து வருகிறது.  அந்த வகையில் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் காய்கறி வரத்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தடைபட்டுள்ளது. 

சின்ன வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 65 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 45 முதல் 65 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 65 முதல் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Power Shutdown in Chennai: அய்யய்யோ.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Tap to resize

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பீர்க்கங்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகிறது! சென்னையின் நிலை என்ன? வானிலை மையம் சொன்ன தகவல்!

Latest Videos

click me!