Published : May 26, 2025, 03:50 PM ISTUpdated : May 26, 2025, 03:58 PM IST
மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்காதது, கட்சிக்குள் அவர் புறக்கணிக்கப்படுவதாக பேசப்படுகிறது.
தமிழக பாஜக மாநில தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணாமலை பொறுப்பேற்றார். தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடையும் வகையில் பல்வேறு பணிகளையும் அண்ணாமலை மேற்கொண்டு இருந்தார். அதிரடி அரசியலின் காரணமாக தமிழக மக்களின் பார்வை அண்ணாமலை மீது திரும்பியது.
தினந்தோறும் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவுக்கு கடும் சவாலாகவே அண்ணாமலை திகழ்ந்தார். நாள்தோறும் செய்தியாளர் சந்திப்பு, போராட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் என போராட்டங்களை நடத்திக் கொண்டே இருந்தார். தமிழகம் முழுவதும் நடை பயணமும் மேற்கொண்டார்.
26
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி
அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவை மதிக்காமல் அதிமுக தலைவர்களே அவமரியாதை செய்து பேசியிருந்தார். இதன் காரணமாகவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்தது. வேறு வழி இன்றி தனித்தனியாக தேர்தலை எதிர் கொண்ட இந்த கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. திமுகவிற்கு வெற்றி எளிதாக அமைந்தது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக அண்ணாமலை கட்சி பணி மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்தினார்.
36
மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி
இதனை தொடர்ந்து தமிழகம் வந்த அமிஷாவும் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என அறிவித்தார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன என அண்ணாமலை அறிவித்திருந்தார். அதற்கு ஏற்றார் போல் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய தையடுத்து நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய அண்ணாமலை, கோயில் தியானம் என ஆன்மிக பயணங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் விவசாயத்திலும், ஆடு. மாடு வளர்ப்பிலும் குடும்பத்தோடு நேரம் செலவழித்து வருவதாகவும் தெரிவித்திரு இருந்தார்.
அதேநேரம் பாஜக சார்பாக நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. பாஜக மாநில தலைமை அழைப்பு விடுத்தாலும் அதனை அண்ணாமலை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது
56
பாஜக நிகழ்வுகளில் பங்கேற்காத அண்ணாமலை
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட்டணி கட்சி தலைவராக எடப்பாடியை பாஜக மூத்த தலைவர்கள் சென்று சந்தித்த நிலையில் அண்ணாமலை புறக்கணித்திருந்தார். இன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நாடு ஒரு தேர்தல் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டிருந்த நிலையில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.
அண்ணாமலை மாநில தலைவராக இருந்த போது பல பாஜக மூத்த நிர்வாகிகளை பகைத்துக்கொண்டார். ஒன் மேன் ஆர்மியாகவே இருந்தார்.
66
பழிவாங்கும் பாஜக தலைவர்கள்
இதனால் வேறு வழியில்லாமல் அமைதி காத்து வந்த தலைவர்கள் தற்போது இது தான் சான்ஸ் என அண்ணாமலையை பெரும்பாலான நிகழ்விற்கும் உரிய முறையில் அழைப்பதில்லையெனவும் இதனால் எந்த வித நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் அண்ணாமலை ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.