விஜய்யும் தமிழக அரசியலும்
நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத உயரத்தில் இருந்து வருகிறார், இவரது வளர்ச்சிக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு காரணம் என்றாலும், தனது உழைப்பும் முக்கிய காரணம் என நிரூபிக்க தவறியதில்லை. நடித்து மட்டும் கொண்டிருந்த விஜய்க்கு ஒரு விதத்தில் அரசியல் ஆசையை தூண்டிவிட்டது ஜெயலலிதா என்றே சொல்லலாம்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த விஜய், அதிமுக-விற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதற்கு காரணம் காவலன் படம் ரிலீஸ் சமயத்தில் திமுக-வினர் கொடுத்த நெருக்கடி தான் என சொல்லப்பட்டது.
அதிமுக வெற்றிக்கு விஜய் காரணமா.?
இதனையடுத்து விஜய் ரசிகர் மன்றத்தினர் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்தல் பணியும் அதிமுகவை மிகப்பெரிய வெற்றியை அடையவைத்தது. இதனையடுத்து ஜெயலலிதாவை சந்தித்து தனது மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் கூறினார் நடிகர் விஜய். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவை முதல்வர் ஆக்கியதற்கு ஒரு அணிலாக இருந்து உதவியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருந்தார்.
இதனையடுத்து பல்வேறு திரைப்பட நிகழ்வுகளின் போது அதிமுக ஆட்சிக்கு வந்ததற்கு விஜய் தான் முக்கியம் என மேடையில் பேசவும் செய்தனர். இதனை சிறிதும் ரசிக்காத ஜெயலலிதா விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏசிக்கு எதிராக தனது அரசியலை வெளிக்கொண்டார்.
மக்களவை தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை - த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டம்!
டைம் டூ லீட்- கோவத்தில் ஜெயலலிதா
இதனை தொடர்ந்து அரசியல் ரீதியாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பித்தபோது, ' டைம் டூ லீட்' என்கிற டேக் லைனுடன் 'தலைவா' பட வெளியீட்டிற்கான அறிவிப்பு வந்தது. இது மட்டுமில்லாமல் தலைவா படத்தில் விஜயை அரசியலுக்கு அழைக்கும் படி வசனமும் இடம்பெற்றிருந்தது.
இதற்கு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக படத்தை வெளியிடமுடியாத படி தடை போட்டனர். இதற்கு சமாதானம் பேச கோடாநாட்டில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் சென்றார். ஆனால் விஜய்க்கு அனுமதி கொடுக்காமல் ஜெயலலிதா திருப்பி அனுப்பினார்.
விஜய்யை பார்க்க மறுத்த ஜெயலலிதா
இதன் பிறகு ஜெயலலிதாவை சமாதானம் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இறுதியாக பல நாட்கள் கழித்து 'டைம் டூ லீட்' என்கிற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. கத்தி படம் வரையில் யோசித்து அரசியல் வசனங்களை பேசி வந்த விஜய், கத்தி படத்திற்கு பின்னர் நேரடியாகவே அரசியல் பேசத் தொடங்கினார். அடுத்ததாக மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த விஜய் பேசிய வசனம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் பல காட்சிகளை நீக்கச் சொல்லி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
Thuppakki
நாட்டின் அரசியை வீழ்த்தும் விஜய்
இதே போல துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதி போல் காட்சி உருவாக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவும் விஜய்க்கு மிகப்பெரிய தலைவலியாக உருவானது. அடுத்ததாக புலி படத்தில் ஒரு நாட்டின் அரசியை வீழ்த்துவது போல் படம் அமைக்கப்பட்டது இதுவும் ஜெயலலிதாவை குறி வைத்தே படம் எடுக்கப்பட்டதாக கூறி எதிர்ப்பு கிளம்பியது.
வில்லிக்கு கோமளவல்லி பெயர்
அடுத்ததாக சர்க்கார் படம் மிகப்பெரிய அளவில் அதிமுக- விஜய் இடையே மோதலை ஏற்படுத்தியது. இந்த படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் ஒரிஜினல் பெயரான கோமளவல்லி என பெயரிட்டு இருந்ததோடு மட்டுமின்றி அந்த படத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தரையில் போட்டு உடைப்பது போன்றும் இதற்கு ஆளும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்ட்டதையடுத்து நாயகியின் பெயரும், அந்த காட்சியும் துண்டிக்கப்பட்டது.