vegetables price : தக்காளி, வெங்காயம் விலை மீண்டும் அதிகரித்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

First Published | Feb 2, 2024, 9:18 AM IST

காய்கறிகள் கோயம்பேடு மொத்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து கணிசமாக இருப்பதால் விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத நிலை நீடிக்கிறது. 

Vegetables Price Koyembedu

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

vegetables

கேரட் விலை உயர்ந்ததா.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளை சுற்றி வளைத்த என்ஐஏ... சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனையால் பரபரப்பு

Latest Videos


Vegetables Price Today

கொத்தவரை விலை நிலவரம்

பீன்ஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் தகவல்.!

click me!