தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அதிமுக, பாஜக உட்பட பல கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீடு குறித்தும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதே நேரம் திமுகவின் கூட்டணியை எதிர்க்க அதிமுகவும் காய் நகர்த்தி வருகிறது. அதன் படி திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
25
திமுகவை வீழ்த்த திட்டமிடும் அதிமுக
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் தங்கள் அணிக்கு இழுக்க ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதே போல விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தையும் கூட்டணியில் இணைக்க திட்டமிடுகிறது. ஆனால் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தங்கள் தலைமையில் தான் கூட்டணி என அறிவித்து விட்டது.
35
அதிமுகவின் தொகுதி பங்கீடு என்ன.?
இதனால் மற்ற கட்சிகளோடு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் குறைந்தது 170 முதல் 180 தொகுதிகளில் அதிமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பாஜகவிற்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கீடு செய்தது போல 20 சட்டமன்ற தொகுதியும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் எனவும் ஒரு சில சிறிய கட்சிகளுக்கு என 5 தொகுதிகள் வரை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் பாஜக தரப்போ தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும் எனவே பாஜகவிற்கு 40 தொகுதிகள் வரை கேட்டு பெற வேண்டும் என பாஜக மூத்த தலைவர்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தங்கள் அணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவுள்ளதால் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக செப்டம்பர் மாதமே பேச்சுவார்த்தையை தொடங்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
55
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது.?
இதற்காக பாஜக தரப்பில் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுக தரப்போ இந்தாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கலாம். அப்போது தான் அதிமுக கூட்டணிக்கு எந்த எந்த புதிய கட்சிகள் இணையும் என தெரியவரும் என தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.