Published : May 20, 2025, 07:48 AM ISTUpdated : May 20, 2025, 09:09 AM IST
தமிழகத்தில் பள்ளி ஊழியர்களின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முக்கிய மற்றும் அவசர பணிகளுக்கு மட்டுமே கூடுதல் நேரம் அனுமதிக்கப்படும்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. அதிலும் பள்ளிகல் முன்கூட்டியே காலை 9 மணிக்கே தொடங்குகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே காலை 9 மணிக்கு பணி தொடங்குவது தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பள்ளிகல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமைச்சுப் பணியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரத்தினை காலை 9.00 மணி முதல் 4.45 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24
ஊழியர்கள் இனி காலை 10 மணிக்கு வந்தால் போதும்
பல்வேறு சங்கங்கள் இவ்வாணையினை இரத்து செய்து ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போன்று அனைத்து அமைச்சுப் பணியாளர்களுக்குமான வேலை நேரத்தினை மீண்டும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை என நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாலும், அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணிநேரத்தினை நிர்வாக நலன் கருதி ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளதாலும், பள்ளிகள் மற்றும்
34
பணி நேரம் மாற்றி அமைத்து உத்தரவு
அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரத்தினை காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை என்று மாற்றியமைத்து ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையினை கவனமாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று, பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றி அமைக்கப்படுகிறது.
மேலும், இவ்வேலை நேரத்திற்கு பின்பு வழக்கமான பணிகள் அல்லாமல் முக்கிய மற்றும் அவசர பணிகள் இருக்கும் போது மட்டும் கூடுதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ளவும்,
விடுமுறை நாட்களில் முறைப்பணிக்கு வரிசைக் கிரமமாக பட்டியலிட்டு அதன்படி பணியாளர்களை அலுவலகம் வரும்படி அலுவலகத் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் உரிய அறிவுறுத்தங்களை சுற்றறிக்கை மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.