மீண்டும் திரும்புமா 2011.! திமுகவை வீழ்த்த ஜெயலலிதா ஸ்டைலில் பிளான் போடும் எடப்பாடி
அதிமுக- திமுக
தமிழகத்தில் திமுக கூட்டணியானது உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. அதே நேரத்தில் ஜெயலலிதா இருந்தவரை அசைக்கமுடியாத அரசியல் கட்சியாக அதிமுக இருந்து வந்தது. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி மோதலால் பல பிரிவுகளால் பிளவுபட்டுள்ளது.
இதனால் வாக்குகள் சிதறி எதிர்கட்சிகளுக்கு எளிதான வெற்றியாக மாறி வருகிறது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், கூட்டணி கணக்கு இப்போதே ஆரம்பித்து விட்டது.
eps politics
தேர்தல் கூட்டணி கணக்கு
அந்த வகையில் எந்த கட்சியோடு எந்த கட்சி கூட்டணி, எத்தனை சீட் என பலவித யூகங்கள் தொடங்கியுள்ளது. அதன் படி ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுக காய் நகர்தி வருகிறது. விஜய்யோடு இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. அதன் படி விஜய்யும் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அதிமுக தொடர்பாக ஒரு வார்த்தை கூட எங்கும் பேசவில்லை. எனவே 2026ஆம் ஆண்டு தனித்து தேர்தலை எதிர்கொண்டால் வாக்குகளை பெற முடியுமே தவிர வெற்றியை பெற முடியாது என உணர்ந்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
Vijayakanth jayalalitha
ஜெயலலிதா ஸ்டைலில் எடப்பாடி
எனவே கூட்டணிக்கு தயார் என தவெக மாநாட்டிலும் அறிவித்துள்ளார். அதன் படி 2026ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தவெக இணையும் என கூறப்படுகிறது. குறிப்பாக 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்த விஜயகாந்தோடு கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா, அப்போது தேமுதிகவிற்கு 41 தொகுதிகளை ஒதுக்கியிருந்தார். அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெற்றது. எதிர்கட்சி வரிசையில் கூட அமர முடியாத நிலை திமுகவிற்கு ஏற்பட்டது.
EPS vijay
விஜய்யை இழுக்க திட்டம்
அதே போலத்தான் இந்த முறையும் திமுகவிற்கு எதிராக விஜய்யை அதிமுக கூட்டணி சேர்க்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருகிறார். இதற்காக திரைமறைவில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக கூட்டணியில் தவெக இணையும் பட்சத்தில் குறைந்தபட்சம் 45 முதல் 55 தொகுதிகள் வரை ஒதுக்கி அதிமுக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பல சுவாரஸ்யங்களை சந்திக்கவுள்ளது. மேலும் பல கட்ட போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
Vijay politics
அரசியல் - நொடிக்கு நொடி மாற்றம்
குறிப்பாக திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமையில் ஒரு அணி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே அரசியலில் நிரந்தர நன்பனும் இல்லை- எதிரியும் இல்லை, எனவே எந்த நேரத்திலும் எந்த வித மாற்றமும் உருவாகும். காலம் தான் இதற்கு பதில் சொல்லும்