1000 யூனிட் வரை இலவச மின்சாரம்.! யாருக்கெல்லாம்? குஷியில் துள்ளிக்குதிக்கும் தொழிலாளர்கள்!

Published : Feb 03, 2026, 12:57 PM IST

Free Electricity: தமிழக அரசு விசைத்தறி தொழிலாளர்களின் நலனுக்காக, கட்டணமில்லா மின்சார வரம்பை 750 யூனிட்டிலிருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 1,37,512 விசைத்தறி நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்.

PREV
15
தமிழக அரசின் இலவச மின்சாரம்

தமிழக அரசு பொதுமக்களுக்காக பல்வேறு அதிரடி சரவெடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதை திமுக அரசும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தமிழக அரசு விவசாயிகளின் நீர்பாசன வசதிக்காக 24 மணி நேரமும் இலவச முன்முனை மின்சாரம் வழங்கி வருகிறது. 2025ம் ஆண்டில் 50,000 புதிய மின்ணைப்புகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.

25
விசைத்தறி தொழிலாளர்கள்

இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முக்கியமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள விசைத்தறி நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சார வரம்பு 750 யூனிட்டிலிருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

35
1.37 விசைத்தறி நுகர்வோர்கள் பயன்

இந்த மாற்றம் இரண்டு மாத மின் பில்லிங் காலத்திற்கு பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 1,37,512 விசைத்தறி நுகர்வோர்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர்.

45
விசைத்தறி தொழிலாளர்களுக்கு பயன்

விசைத்தறி தொழில் மாநிலத்தின் முக்கிய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளன. மின்சாரம் இவர்களுக்கான முக்கியமான உற்பத்தி மூலமாக இருப்பதால், கட்டணமில்லா மின்சார வரம்பை உயர்த்துவது அவர்களின் பொருளாதார சுமையை குறைத்து உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று அரசு நம்புகிறது.

55
தமிழ்நாடு அரசு

TANGEDCO வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாநில அரசு வழங்கும் இத்தகைய உதவிகள், அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதோடு, மாநிலத்தின் பாரம்பரிய தொழில்கள் வளர்ச்சிக்கும் புதிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி மூலம் தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் நலனில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories