Rain in Chennai
வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடல் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் என்ன கூறி இருக்கிறார் என்று பார்க்கலாம்.
Rain in Tamil Nadu
சென்னையில் 5 நாட்களுக்கு மழை
சென்னையில் இன்று தொடங்கும் மழை 4-5 நாட்களுக்கு நன்றாக நீடிக்கும். டெல்டா பகுதிகளான நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இன்று பெரிய நாளாக அமையும். கடலூர் பாண்டிக்கும் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கைக்கு கீழாக அமைந்துள்ளது. வடக்கே பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. மெதுவாகச் செல்வது மற்றும் ஸ்தம்பிப்பது காரணமாக நவம்பர் 1ஆம் தேதி வரை அடுத்த 4-5 நாட்கள் தமிழக கடற்கரையோர பகுதிகளில் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
Cyclone
டிசம்பர் 1ஆம் தேதி வரை மழை
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று மழை ஆரம்பம். நல்ல மேகங்கள் நகர்கின்றன, சென்னையில் மழை 27 ஆம் தேதி முதல் டிச 1 வரை இருக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு கீழே கடற்கரையை தாண்டினால் வட கடற்கரையை கடக்கும் போதும் மழை வரும். எனவே சென்னைக்கு அதிக மழை வாய்ப்பு இருக்கிறது. இன்று முதல் டிசம்பர் 1 வரை மழையை அனுபவியுங்கள் என கூறியுள்ளார்.
RAIN
கார்களை பாலத்தில் நிறுத்தணுமா.?
கார்களை ப்ரிட்ஜ்ல நிறுத்தணுமா, லாட்ஜ்ல தங்கணுமா, சூப்பர் மார்க்கெட் எல்லாம் காலியாகணுமா - நான் அப்படி எதுவும் அட்வைஸ் பண்ணப்போவதில்லை என கூறியுள்ளார். மேலும் தற்போது சென்னைக்கு மழை தேவை, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டியில் தண்ணீர் சேமிப்பு 15%, செம்பரம்பாக்கத்தில் 59% மற்றும் ரெட்ஹில்ஸ் 71% அளவு இருப்பதாக கூறியுள்ளார்.
எனவே 2025ல் சென்னைக்கு தண்ணீர் பிரச்சனை வருமா பதில் இல்லை. நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை எதிர்பார்க்கிறேன். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவடங்களில் இந்த வடகிழக்கு பருவமழையில் இதுதான் கடைசி கன மழை என கூறியுள்ளார்.