அமைச்சர் கே என் நேருக்கு என்ன ஆச்சு.! மருத்துவமனையில் திடீர் அனுமதி- காரணம் என்ன.?

First Published | Nov 26, 2024, 10:17 AM IST

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்,

Minister K N Nehru

அமைச்சர் நேருக்கு உடல் நிலை பாதிப்பு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு அரசியல் களத்தில் படு வேகமாக சுற்றி வருபவர், தற்போது மழை பாதிப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். சென்னை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாநகராட்சி பணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்.

Minister K N Nehru

தனியார் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு சோர்வாக இருந்துள்ளார். இதனையடுத்து இன்று காலை உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அமைச்சர் நேரு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்துள்ளது. இதனஐயடுத்து அமைச்சரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

Tap to resize

Apollo Hospitals

காய்ச்சலுக்கு சிகிச்சை

மேலும் தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் பல இடங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அமைச்சர் கேஎன் நேரு உடல்நிலை பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் விசாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Minister K N Nehru

உடல்நிலை விசாரித்த முதலமைச்சர்

எனவே தற்போது மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கேஎன் நேரு இன்றும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என திமுவினர் தெரிவித்து வருகின்றனர். 

Latest Videos

click me!